நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், நா ரெடிதான் வரவா “ பாடலில் நடனமாடிய கலைஞர்களுக்கு ஊதியம் தரவில்லை என சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
லியோ படத்தில் இடம்பெற்றிருந்த அந்த ‘நா ரெடிதான் வரவா’ பாடலில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் நடனம் ஆடி இருந்தார்கள். அவர்களிலில் சிலருக்கு சம்பளமே கொடுக்கப்படவில்லையாம். படத்தில் நடனம் ஆடியதற்காக 3 மாதங்களாகியும் இன்னும் சம்பளமே கொடுக்கவில்லையாம். ஒரு நாளைக்கு ரூ.4,000 சம்பளம் தருவதாக பேசப்பட்டு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாம்.
பாடல் காட்சிகள் மட்டும் 6 நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில். பேசியபடி பார்த்தால் தலா 24,000 கொடுக்கப்படவேண்டுமாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் 3ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். எனவே, இதன் காரணமாக அந்த நடனமாடிய 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
புகார் கொடுத்தது மட்டுமின்றி 7 ஸ்க்ரீன் நிறுவனத்திற்கு நேரடியாகவே சென்று சம்பளம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கிறது. இதற்கு 7 ஸ்க்ரீன் நிறுவனம் சங்க உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் கொடுத்துள்ள 7 ஸ்க்ரீன் நிறுவனம்’ தங்களுக்கு 1,300 நடன கலைஞர்கள் மொத்தமாக தேவைப்பட்டார்கள் எனவும், தாங்கள் நேரடியாக அவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாது என்ற காரணத்தால் சம்பந்த பட்ட சங்கத்திடம் தெரிவித்துவிட்டு அவர்கள் எங்களுக்கு ஏற்பாடுகளை செய்து தருவார்கள். எனவே அவர்கள் தான் பாடலில் நடனம் ஆட உறுப்பினர்களை படப்பிடிப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.
அதாவது சுமார் 400 பேரை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். மீதம் இருப்பவர்கள் அந்த சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள். அந்த சங்கத்தின் சார்பாக தங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டதாகவும் அதில் கொடுக்கப்பட்ட சம்பள விவரங்களை பார்த்து தான் நாங்கள் ஒற்றுக்கொண்டோம். எனவே, அவர்கள் யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுக்கவேண்டுமோ அதற்கான வங்கிக்கணக்குள் மற்றும் சம்பளம் கொடுத்த எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது என விளக்கம் கொடுத்துள்ளது. படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த மாதிரி சர்ச்சைகள் வருவது படக்குழுவை கடுப்பாக்கியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…