படப்பிடிப்பில் தான் முகத்தை பார்த்து பேச கூட யாரும் இல்லை நடிகை பார்வதி! இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் தானாம்
மலையாளத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் ” உயரே”.இப்படத்தில் படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார்.
இப்படத்தை இயக்குனர் மனு அசோகன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் அனுபவம் பற்றி பேசிய பார்வதி , இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை போன்று தன்னை மேக்கப் போட்டு மாற்றிய பிறகு படப்பிடிப்பு இருந்த யாரும் முகம் கொடுத்து பேசக்கூடவில்லை.
இந்நிலையில் தன்னிடம் வந்து அடிக்கடி பேச கூடிய நபர்கள் கூட தன்னிடம் பேச வில்லை என மன வருத்தத்துடன் கூறினார்.மேலும் நம் சமுதாயத்தில் இது போன்று சம்பவத்தில் பாதித்த நபர்களை பிற நபர்கள் முகம் சுழித்து பார்ப்பதை தனக்கு வேதனை அளிக்கிறது என கூறினார்.