கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்ல! கொந்தளித்த ரோபோ சங்கர்!

நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமா துறையிலே பல பிரபலங்கள் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள். இதில் ரோபோ சங்கர் தன்னுடைய வீரரின் கமல்ஹாசனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்க மோதிரத்தில் பதிவு செய்து வைத்திருப்பார்.
இவர் அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்றே கூறலாம். இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசன் குறித்தும் நாயகன் படம் ரீ-ரிலீஸ் ஆவது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ரோபோ சங்கர் ” நாயகன் படம் பல ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
படத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கமலா திரையரங்கை உண்டு இல்லை என்று ஆக்க முடிவு செய்துள்ளேன். படத்தை கொண்டாட திரையரங்குகளில் அனுமதி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எனவே, எந்த தேதியாக இருந்தாலும் நான் நாயகன் படத்தை கொண்டாடி தீர்ப்பேன். இதனை கொண்டாடி நானே என்னுடைய தலைமையில் விழாவையும் ஏற்பாடு செய்து இருக்கிறேன்.
இதனால் நாயகன் படத்தில் நடித்த நடிகர்களிடமும் பேசிவிட்டேன். படத்திற்கு பேனர் வைப்பதில் இருந்து திரையரங்குகளுக்கு உள்ளே என்னவெல்லாம் செய்வது என்பது என எல்லாத்தையும் முடிவு செய்துவிட்டேன். இதுவரை தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸில் யாரும் செய்யாததை செய்யப்போகிறேன். எப்படியெல்லாம் கொண்டாட போகிறேன் என்பதை மக்கள் நிதி மையம் அலுவலகத்திலும் சொல்லிட்டேன் அவர்களும் எனக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
எனவே, நான் குருவாக நினைக்க கூடிய கமல்ஹாசன் சாருக்கு ஒரு பக்தனாக என்னால் முடிந்த அளவிற்கு நான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர் ” கமல் சார் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை அவர் மிகவும் பெரிய கலைஞர்” எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் ” லியோ படத்தில் கமல்ஹாசன் பேசும் காட்சிகள் வருகிறது அது எதற்கு வருகிறது என தெரியவில்லை அவர் என்ன கிழிச்சாரு என கலாய்த்து வருகிறார்கள் ஒரு கமல் ரசிகனாக நீங்க இது பத்தி என்ன சொல்றீங்க? என்று கேட்டார்கள். அதற்கு முதலில் பதில் அளித்த ரோபோ இதனை நீங்கள் லோகேஷ் கனகராஜ் கிட்ட தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.
பிறகு விடாமல் அந்த செய்தியாளர் நீங்க ஒரு கமல் ரசிகர் அதனால் உங்கள் கிட்ட கேட்கிறோம் என்று கேள்வி கேட்டார். அதற்கு சற்று கடுப்பான ரோபோ சங்கர் ” கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்ல. இப்படி எல்லாம் கேட்பது மிகவும் தவறான விஷயம். இந்த வருஷம் நான் போஸ்டர் ஒன்றை அடிக்கவிருக்கிறேன். அது என்னவென்றால், ‘உம்மை தெரியாதவர்கள் இவுலகில் யாரும் இல்லை உம்மை தெரியாதவர்கள் இவுலகில் இருந்தும் தேவையில்லை’ என்று தான் போஸ்டர் அடிக்கவுள்ளேன்” எனவும் நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் நாயகன் திரைப்படம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி -ரீரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.