விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – நடிகர் ஜெயம் ரவி.!
எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என நடிகர் ஜெயம் ரவி சைரன் பட பிரஸ் மீட்டில் பேசியுள்ளார்.
அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (பிப்16-ஆம் தேதி) வெளியான திரைப்படம் சைரன். இந்த படும் சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 1000 திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று சைரன் படக்குழு பிரஸ் மீட் ஒன்றை நடத்தி பேசியது. அதில், நடிகர் ஜெயம்ரவியிடம் பல்வேறு கேள்விகள் குறித்து கேட்கப்பட்டது, அப்போது அரசியல் கேள்விகளும் எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, நடிப்பைத் தவிர அரசியல் ஈடுபாடு எப்போதும் இல்லை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தற்போது வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். அந்த முயற்சிக்கு சைரன் படம் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசியல் ஆசை இருக்கிறதா? என்று தொடர்ந்து என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை, சினிமாவை தாண்டி இப்போதைக்கு சிந்தனையில்லை.
அதைப்போல விஜய் அண்ணா இடத்தை நான் உட்பட யாராலும் நிரப்ப முடியாது என்றார். பின்னர், அவரிடம் விஜய் அண்ணாக்கு வாக்கு அளிப்பீர்களா? என்ற கேட்டதற்கு என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என்று பதில் கூறினார்.