simran [File Image]
Simran : நடனத்தில் சிம்ரன் தான் எப்போதும் சிறந்தவர் என தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் என்றாலே நம்மளுடைய பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான். அதன் பிறகு தான் அவருடைய நடிப்பு நம்மளுடைய நியாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு பல ஹிட் பாடல்களில் சிம்ரன் நடனம் ஆடி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளார். இதனாலே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எல்லாம் அவருடைய நடனத்தை பார்த்து பாராட்டி பேசுவது உண்டு.
அந்த வகையில், பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்ரன் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய தினேஷ் ” சிம்ரனுடன் எனக்கு முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் ஆல்தோட்ட பூபதி பாடலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவரை போல நடனம் ஆட கூடிய நடிகை யாருமே இருக்க முடியாது.
அவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்து அவர் கடைசியாக பீக்கில் இருந்த நேரம் மட்டும் இல்லை இப்போது அவரை அவருக்கு இணையாக நடனம் ஆட எந்த நடிகையும் வரவில்லை. எப்போதுமே நடனமாடும் அந்த விஷயத்தில் அவர் தான் டாப்பு. இப்போது நான் பார்த்ததில் அவருக்கு அடுத்த படியாக நல்ல நடனம் ஆடுவது யார் என்று கேட்டால் நான் தமன்னாவை சொல்லுவேன்.
தமன்னா இப்போது நன்றாக நடனம் ஆடி கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் இடம்பெற்று இருந்த கவாலா பாடலில் அவருடைய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால், என்னை பொறுத்தவரை எப்போதும் சிறந்த நடனம் ஆடும் நடிகை யார் என்று கேட்டால் சிம்ரன் என்று தான் கூறுவேன். சிம்ரனை யாராலும் மிஞ்சவே முடியாது” எனவும் தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…