என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.!
இயக்குனர் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது.
READ MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !
தற்பொழுது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்கிறார். இன்று காலை ஹைதராபாத் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது, தனது விமானத்திற்கு செல்லும் அவசரம் இருந்தாலும், வழியில் தனது ரசிகை தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள காத்திருந்ததை அறிந்து அவருடன் செல்ஃபீ எடுத்துக்கொண்டு சென்றார்.
READ MORE – சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக நடிகர் ரஜினகாந்த் லால் சலாம் படத்தில், கேமியா ரோலில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, வேட்டையினில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
#Thalaivar respects fans and their love for him ❤️❤️❤️❤️❤️
Vc : @BinaryPost001#Rajinikanth | #Rajinikanth???? | #superstar @rajinikanth | #Jailer | #SuperstarRajinikanth | #Jailer2 | #Thalaivar171 | @RIAZtheboss | #Vettaiyan pic.twitter.com/5mGxEMJ6PB
— Suresh balaji (@surbalutwt) February 27, 2024
READ MORE – மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி!
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அநேகமாக, இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தாலும், விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.