japan movie [File Image]
கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீப காலமாக பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகிறது. கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வழக்கமாக கார்த்தியின் படங்கள் தனியாக வெளியாவதே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதனுடன் கார்த்தி படங்கள் வெளியாகும் அதே தினத்தில் வேறு நடிகர்களின் திரைப்படங்களும் வெளியானல் கூட அந்த படங்களை மிஞ்சும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்து கிளாசில் கார்த்தியின் படங்கள் வெற்றி அடைந்து விடுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கைதி மற்றும் விஜயின் பிகில் ஒரே தினத்தில் வெளியானது இதில் பிகில் பெரிய அளவில் வசூலை ஈட்டினாலும் படத்தின் பட்ஜெட் அதிகம். ஆனால் கைது படத்தின் பட்ஜெட் மிக குறைவு ஆனால் வசூலை அள்ளி குவித்தது 100 கோடி.
அதே போல தான் சமீபத்தில் கார்த்தி சர்தார் படத்தை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் வெளியிட்டார் அதில் பிரின்ஸை விட பல கோடிகள் வசூல் செய்து சர்தார் திரைப்படம் வெற்றி அடைந்தது. இந்த நிலையில் அதே போல தான் இந்த ஆண்டு தீபாவளிக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ,ரைடு, உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
ஜப்பான் திரைப்படப்பும் அதே தினத்தில் வெளியாகதால் கண்டிப்பாக ஜப்பான் திரைப்படம் வெற்றி அடையும் என படக் குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில், தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகிறது என்றாலும் கவலை இல்லை என ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” தீபாவளி அன்று 2 படங்கள் வெளியாகிறது. அதில் மூன்றாவதாக ஒரு படம் ரிலீசானாலும் கவலையில்லை ஏனென்றால், படத்தின் கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றிபெறும். பல படங்கள் தீபாவளி அன்று வெளியாவதால் போதிய திரையரங்குகளும், காட்சிகளும் ஜப்பான் படத்திற்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன். எத்தனை திரையரங்குகள் கிடைக்கிறது என்பதைவிட எத்தனை பேர் படத்தை விரும்புகிறார்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது” எனவும் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…