நடிகர் பிரேம்ஜி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகரும் ஆவார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களில் நகைசுவையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கேம் ஓவர் என்று அச்சிடப்பட்ட டிஷர்ட்டை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு திருமணமாக போகுது போல என்று, நினைத்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து கமெண்ட் செய்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில், ஜாம்பி படத்தின் இசை ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘ சில தினங்கள் முன் கேம் ஓவர் என்ற டிஷர்ட்டை போட்டேன். இதை பார்த்த பலரும் எப்போது திருமணம் என்று கேட்டனர். ஆனால் கேம் ஓவர் இல்ல, கேம் ஆன், நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான்.’ என கூறியுள்ளார்.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…