நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தார். பிறகு தான் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் கொண்ட படங்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்கமாட்டேன் என்னுடைய படங்களை குழந்தைகளும் பார்கிறார்கள் என்பதால் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனாக தலைவர் 171 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தலைவர் 171 திரைப்படத்தையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். ஏற்கனவே அவர் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்சரி நடிக்க வைக்க ஆசைப்பட்டு இருந்தார்.
அந்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடியாத நிலை உருவான காரணத்தால் இந்த தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டு இருக்கிறாராம். சிறிய வயதில் இருந்து ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் அவர் தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் போதெல்லாம் படத்திற்கு ஆசீர்வாதம் வாங்கும் அளவிற்கு தீவிர ரசிகர்.
தலைவர் 171 படத்தை நீ தான் பண்ணனும்! ரஜினிக்காக ஒளிப்பதிவாளரிடம் கெஞ்சிய விஜய்!
எனவே, கண்டிப்பாகவே அவருக்கு ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் மறுப்பு தெரிவிக்காமல் நடிப்பார் என கூறப்படுகிறது. தலைவர் 171 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை ஆனால், நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் அவர் வில்லனாக நடிக்கும் நடிக்கும் தகவல் உறுதி என கூறப்பட்டு வருகிறது.
மேலும், இந்த தலைவர் 171 படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய அடுத்த படமான 171-வது படத்தில் நடிப்பார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…