நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று, அஜித் ரசிகர்கள் #RIP actor vijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் ரசிகர்கர்களின் இந்த செயல், விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்ததுடன், திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்களின் இந்த செயலை எதிர்த்து, பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் #longlifevijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு, திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும், விஜயின் நெருங்கிய நண்பருமான நடிகர் சஞ்சீவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ விஜய் பார்க்காத துரோகமும் இல்ல…. விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல… இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் ஜோசப் விஜய் #longliveVIJAY என்று பதிவு செய்திருக்கிறார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…