கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kanguva

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல்  செய்தது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முழு தொகையையும் ரிலையன்ஸ்-க்கு இன்று செலுத்தப்பட்டதாக கூறியதை அடுத்து, படத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் நான்காவது பாடலை நேற்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கங்குவா படத்தில் நடிகர்கள் திஷா பதானி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ரவி ராகவேந்திரா, பிஎஸ் அவினாஷ் மற்றும் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan
Virat kohli argument with Australian player Sam konstas