அஜித் நடிக்கவுள்ள AK62 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறொரு இசையமைப்பாளர் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
AK62
நடிகர் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
AK 62 படத்தில் திடீர் மாற்றம்
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், சில காரணங்களால் ak 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக பிரபல இயக்குனரான மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் பரவியது.
AK62 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இல்லை..?
இந்த நிலையில் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்ற காரணத்தால், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் இசையமைக்கவில்லையாம். AK62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதால் அவருடன் தடம் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அருண் ராஜ் AK62 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் – அஜித் காம்போ
ஏற்கனவே அஜித் அனிருத் கூட்டணியில் வெளியான வேதாளம், விவேகம் ஆகிய படத்தின் பாடல்களும். பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் ஆனது. எனவே இந்த படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனிருத் ak62 படத்திற்கு இசையமைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480…
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…