நேர்கொண்ட பார்வை படத்தினை தமிழ்நாட்டில் வாங்கி திரையிட இத்தனை முன்னனி நிறுவனங்கள் போட்டி போடுகிறதா?!
தல அஜித் தற்போது நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்த படத்தினை தமிழ்நாட்டில் திரையிட அதிக விலை கேட்பதாகவும், ஆதலால் படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் யோசித்தார்கள் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.