நிவின் பாலி பாலியல் குற்றச்சாட்டு: உண்மையை போட்டுடைத்த தொகுப்பாளினி.!

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்யானது என நடிகையும், தொகுப்பாளினியுமான பார்வதி கிருஷ்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Parvathy backs Nivin Pauly amid assault allegation

திருவனந்தபுரம்: ஹேமா அறிக்கை வெளியான நாளிலிருந்து மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திடீரென மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் எழுந்தது மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.

நிவின் பாலி மற்றும் சிலர் நடிப்புக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி, துபாயில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஊன்னுக்கல் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நிவின் ஆறாவது குற்றவாளி என்றும், தயாரிப்பாளர் ஏ.கே.சுனில் இரண்டாவது குற்றவாளி எனவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது, நடிகையும் தொகுப்பாளினியுமான பார்வதி கிருஷ்ணா, நிவின் பாலிக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் எழுப்பப்பட்ட நாளில் நிவினுடன் ‘வர்ஷங்களுக்குச் சேஷம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்ததாக பார்வதி கூறியுள்ளார்.  அதற்கான ஆதாரத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில்  பேசிய பார்வதி கிருஷ்ணா, “எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது எனது பொறுப்பு என்று நான் நம்புகிறேன். முதலில் டிசம்பர் 14 அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை காட்டுகிறேன். இதன் பின் இது நிவின் பாலியுடன் சேர்ந்து நான் எடுத்த வீடியோ. அந்த ஸ்டேஜில் நானும் அவருடன் இருந்தேன்.

இந்த புகைப்படங்களை பார்த்தால், இது எங்கு எடுத்தது. எந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் என நீங்கள் அடையாளம் காண முடியும். நேற்று செய்தி இவருடைய கண்டு பலர் எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பியிருந்தனர். இந்த தருணத்தில் இதை நான் வெளிப்படுத்த விரும்புனேன் ”என்று அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by PARVATHY (@parvathy_r_krishna)

இதன் மூலம் நிவின் பாலி, இதனை பொய்யான குற்றச்சாட்டு என கூறியதற்கு பார்வதியின் பேச்சு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இதற்கு முன்னர், குற்றம் சாட்டப்பட்ட நாளில் அவர் தன்னுடன் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் இயக்குநரும், நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

அதேபோல், இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை. அவர் கொச்சியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியதற்கான ஹோட்டல் ரசீது வெளியாகியானது. அதன்படி,  நிவின் பாலி டிச.14ம் தேதி மதியம் முதல் டிச.15ம் தேதி மாலை வரை அங்கேயே தங்கியிருந்தாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்