தேசிய விருதை தட்டித் தூக்கிய நித்யா மேனன்! குவியும் வாழ்த்துக்கள்!!
டெல்லி : திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும்தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஷோபனா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு அருமையாக நடிக்க முடியுமோ அப்படி நடித்திருப்பார். படம் வெளியான சமயத்தில் எல்லாம் இளைஞர்களின் மனிதிலும் ஷோபனா கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.இந்நிலையில், அவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் அவார்டுக்கு பெருமை சேர்த்த நித்யாமேனன் என தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தாய்ந்தே எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கி இருந்தார். அதைப்போல, கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகளில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வாங்கி இருந்தார். இதனை தொடர்ந்து முதன் முதலாக திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருதை வாங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.