Nithya Menon - Jayam Ravi [file image]
ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இதனை தொடந்து இந்த ஆண்டு, அவரது நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
தற்பொழுது, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படத்திற்கு நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!
போஸ்டரில் ஜெயம் ரவி – நித்யா மேனன் காதல் ஜோடிகளாக நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த போஸ்டரில் சுவாரசியம் என்னவென்றால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நடிகை நித்யா மேனன் பெயரை முதலில் போடப்பட்டு, இரண்டாவதாக ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு காரணம் நடிகர் ஜெயம் ரவி ஈகோ இல்லாத நடிகர் என்றே சொல்லலாம். மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பெண்ணை மையமாக வைத்து கூட அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…