“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!
மணிமேகலை பிரியங்கா பிரச்னையில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றி பேசி இழிவு படுத்தவேண்டாம் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிஷா தெரிவித்துள்ளார்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது தான் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. பிரபலங்கள் பலரும், இது குறித்துப் பேசுவதை நிறுத்திய காரணத்தால், பிரச்சினை குறைந்திருக்கிறது. திரும்பியும், இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பும் இருக்கிறது.
ஏனென்றால், இன்னும் மணிமேகலை இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசினால் கண்டிப்பாகத் திரும்பவும் இந்த விவகாரம் பேசுபொருளாகும். அவர் இப்போது நமது நாட்டில் இல்லை வேலை விஷயமாக வெளிநாடு வரை சென்றிருக்கிறார். இந்த சூழலில் அவருக்கு ஆதராகவும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும் சிலர், இருவருக்கும் ஆதரவு இல்லாமல் சமநிலையான கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், அறந்தாங்கி நிஷா தன்னுடைய தெளிவான கருத்தை முன் வைத்துள்ளார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிஷா இது குறித்துப் பேசுகையில் ” குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே இந்த பிரச்சினை ஏற்பட்டபோது நான் அங்கு இல்லை. எனவே, இருவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
ஆனால், இருவருக்கும் தொழில் ரீதியாகத் தான் பிரச்சினை எனவே அதனைப் பற்றி மட்டும் தான் பேசவேண்டும். நடுவில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதை மற்றவர்கள் நிறுத்தவேண்டும். ஒரு பெண்ணை இழிவு படுத்திப் பேசுவது எவ்வளவு மோசமானது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். நான் அவர்கள் இருவரிடமும் பேசுவேன்.
இருவருக்கும் கால் செய்து இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது பற்றிப் பேசி தெரிந்துகொள்ள இருக்கிறேன். எனவே, அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினையில் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டாம் என்பது தான் எனது கருத்து ” எனவும் நிஷா அருமையான தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நிஷா கூறியது அவருடைய கருத்து மட்டுமில்லை. அது தான் பலருடைய கருத்தாகவும் இருந்து வருகிறது. ஏனென்றால், மணிமேகலை பிரச்சினையில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தான் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அவர் கண்கலங்கி வனிதாவிடம் கூட, கண்கலங்கி அழுதார். எனவே, இது போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு வேதனை படுத்துகிறது என்பதை உணர்த்தும் வகையில் தான் நிஷா தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.