Nirosha Radha : அந்த விஷயத்தால் மார்க்கெட்டை இழந்த நிரோஷா? உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான்!

nirosha radha

நடிகையும், நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷா அக்னி நட்சத்திரம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக செந்தூரப்பூவே, என் கணவர், கைவீசம்மா கைவீசு, பாண்டி நாட்டுத் தங்கம், மருது பாண்டி, காவலுக்குக் கெட்டிக்காரன், பாரம்பரியம், படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்திருந்தார்.

முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த காலத்திலே நடிகை நிரோஷா கடந்த 1995-ஆம் ஆண்டு நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை நிரோஷா ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றே கூறவேண்டும்.

இதனையடுத்து, முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த நடிகை நிரோஷா காதலால் தான் மார்க்கெட்டை இழந்ததாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நடிகை நிரோஷா நடிகர் ராம்கி காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் ராம்கியை மிகவும் தீவிரமாக நிரோஷா காதலித்தார். ஆனால் முதலில் திருமணம் செய்து கொள்ளவே இல்லை காதலிப்பதாக கிசு கிசு தகவல் மட்டும் வெளியானது.

பின், நீண்ட நாட்களுக்கு பிறகு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் . ஆனால் , நிரோஷா காதலிப்பதாக வெளியான தகவலின் போதே தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிட்டார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் வீட்டிலே இருந்த நிரோஷா தன்னுடைய உடல் எடையை அதிகம் ஆகிவிட்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன் பிறகு அவர் தனது தங்கை ராதிகா தயாரிப்பில் ஒரு சீரியல் மட்டும் நடித்திருந்தார். ஆனால் ராம்கி திருமணம் செய்த பிறகு பல நடிகர்கள் நிரோஷாவை தங்களுடைய படத்தில் போட வேண்டாம் என்று புறக்கணித்தார்கள் . இது தனிப்பட்ட முறையில் எனக்கே தெரிந்த தகவல் எனவும் ‘ பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் . காதலால் நிரோஷாவின் மார்க்கெட் போனதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்