NGK டீசர் வெறித்தனமா இருக்கு – நடிகர் கார்த்தி
நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படத்தின் டீசரை பாராட்டி நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றன. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி NGK படத்தின் டீசர் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘என்.ஜி.கே. டீஸர் பார்த்துட்டேன், வெறித்தனமா இருக்கு எனத் தெரிவித்துள்ளார்.