நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்…இந்த முறை கம்மி! அடுத்த முறை 50 கோடிக்கும் மேல கன்பார்ம்!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. 3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள்.
இந்த திரைப்படம் ரூ.600 கோடியை நெருங்கி இருக்கும் நிலையில், படத்தின் தாயரிப்பாளர்கள் மிகவும் குஷியாகியுள்ளார்கள். இதனால், இயக்குனர் நெல்சனின் சம்பளம் பெரிதும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சனுக்கு முந்திய திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை என்பதால், நெல்சன் மீது தவறான விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நெல்சனுக்கு பெயரையும் புகழையும் மீட் தந்துள்ளது என்றே சொல்லலாம். ஜெயிலர் படத்துக்காக நெல்சனுக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் அந்த 30 கோடியில் இருந்து 8 கோடி குறைத்துக் கொண்டு 22 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் அமோக வரவேற்பாலும் வசூலை வாரி குவித்ததாலும் அவரது அடுத்த படத்தின் சம்பளம் எகிறியுள்ளது.
ஆம்… சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு ரூ.55 கோடி பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்தின் வெற்றி கிடைத்தால் அவர்களது சம்பளம் கூடுவது வழக்கம், அதுபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோடி கோடியாய் வசூலித்து, ஜாக்பாட் அடித்தது போல் தற்போது நெல்சனுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது என்றே சொல்லலாம்.