புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

புத்தாண்டு ஏமாற்றத்தை ஈடுகட்ட விடாமுயற்சியின் டிரெய்லர் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vidaamuyarchi

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட உள்ளது.

அதன்படி, இந்த மாத இறுதியில் படத்தை வெளியிடப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது, ‘இரவு, பகலாக பின்னணி இசையமைக்கும் பணியில் அனிருத் ஈடுபட்டு வரும் நிலையில், 3 நாளில் முடிக்க படக்குழு அழுத்தம் கொடுத்துள்ளதாம்.

இதனால், இசை மற்றும் சவுண்ட் மிக்ஸிங் செய்ய 15 நாள் ஆகும் என திட்டவட்டமாக கூறிவிட்டதால், படம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ட்ரெய்லர் கூட புத்தாண்டை முன்னிட்டு வெளியாகாவில்லை என நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இரவு எல்லாம் கண் விழித்து காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிரைலர் சென்சார் முடிந்துள்ளதாகவும் 2.24 நிமிடம் கொண்ட டிரைலர் பொங்கல் அன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்