’லியோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட் – க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் அஃதொப்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி ’லியோ’திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, லியோ’ படத்தில் அர்ஜுன் நடித்துள்ள ‘Harold Das’ கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னதாக, சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு, லியோ படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
#GlimpseOfHaroldDas #LEO ???? pic.twitter.com/tz1K9fykJP
— Seven Screen Studio (@7screenstudio) August 15, 2023