புது அப்டேட்…இயக்குனர் அவதாரம் எடுக்கும் ‘அருண்மொழிவர்மன்’…ஹீரோவாக நடிக்கும் ‘வந்தியத்தேவன்’.!!

ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோ நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தான் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு ஒன்லைன் மணிரத்னத்திடம் கூறியதாகவும், கதை நன்றாக இருக்கிறது நீங்களே எழுதுங்கள் என மணிரத்னம் கூறியதாக ரவி கூறியுள்ளார். இதையடுத்து அந்த ஒரு கதையை கார்த்தியிடம் ஜெயம் ரவி கூறியுள்ளாராம்.
இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.