இணையத்தில் 35 கோடி வியூஸ் பெற்ற முதல் தமிழ் ஆல்பம் எனும் சிறப்பை மெர்சல் படம் பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியான ஒரு சில நாட்களில் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்பு படத்திற்கு கூடுதல் விளம்பரமாய் மாறிப்போனது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை குவித்தது. இதன்படி படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
வசூலில் சாதனை படைத்ததோடு மட்டுமின்றி, தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்து திரையிடப்பட்டது. மேலும் பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் விருதையும் தட்டிச் சென்றது.
தொடர்ந்து சாதனை படைத்து வரும் விஜயின் மெர்சல், விரைவில் சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்குவர இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்களை இதுவரை 350 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவே அதிக பார்வையாளர்கள் பார்த்த ஆல்பம் என்று சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…