இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், விஜய் முன்னணி நடிகர் என்பதால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குகளில் கிடைக்கும். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளிலும் அதிக திரையரங்குகள் கிடைக்கும். ஆனால், தற்போது படம் தெலுங்கில் வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுஎன்னவென்றால், வாரிசு திரைப்படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தற்போது தெலுங்கு பிலிம் சேம்பர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணாவின் “வீரசிம்ஹ ரெட்டி”, மற்றும் சிரஞ்சீவியின் “வால்டேர் வீரய்யா” ஆகிய படங்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. எனவே இந்த படங்கள் தெலுங்கு படங்கள் என்பதால் இந்த படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால், வாரிசு திரைப்படம் தெலுங்கில் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, படம் தெலுங்கில் மட்டும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி தைரியமாக குறைவையான திரையரங்குகளில் வாரிசு படம் வெளியாகுமா அல்லது தள்ளிபோகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…