தலைவி படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

தலைவி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தை ஏ. எல். விஜய் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் மற்றும் எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியீட திட்டமிட்டிருந்தனர். கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தலைவி திரைப்படம் வரும் செப்டம்பர் 10 – ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைவி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025