தமிழ் சினிமா உலகத்தில் தனக்கென தனி இடத்தையும் தனி மதிப்பையும் தானாகவே உருவாக்கிகொண்டவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஆவார். இவரது படம் என்றாலே ரசிகர்களிடமும் தமிழ் சினிமாவிலும் ஒருவித அதீத எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியாக உருவாகி வெளியான திரைப்படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு வெற்றிபடத்தை படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம்.
மேலும் இவர் இயக்கிவரும் இந்தப் படத்திற்கு ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவியது. இந்த படம் மணிரத்னத்தின் கனவு படம் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை இயக்க அவர் பல்வேறு சமயங்களில் முயற்சி செய்தும் அது முடியாமல் தோல்வியிலே முடிந்தது.இதற்கான காரணமாக படத்தின் பட்ஜெட் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போதுதான் அதற்கு விடிவுகாலம் வந்துள்ளது.இந்த மணிரத்னத்தின் கனவு படத்தில் நடிக்க நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என சிறந்த நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது.
இந்நிலையில் தற்போது கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் புதிதாக ஒரு கதாபாத்திரத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மணிரத்னத்தின் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்தது.இந்நிலையில் தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை,எனவே இப்படம் லைகாவிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல்கள் கூறப்படுகின்றது.இந்த மணிரத்னத்தின் இந்த படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
DINASUVADU.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…