தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?
எனவே, தளபதி 69 திரைப்படத்தினை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ‘தளபதி 69’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை பார்த்த பலரும் கடைசி படம் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிப்பீர்கள் என்பது போல கேள்வி எழுப்பி விமர்சிக்க தொடங்கினார்.
READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கண்டிப்பாக தளபதி 69 திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் இயக்குனர் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் சந்தித்து ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் கதையை கூறியிருந்தார்கள். இதனையடுத்து, இருவரும் சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு ஒன் லைனை கூறினார்களாம்.
read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!
அவர்கள் கூறிய அந்த லைன் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம். எனவே அந்த இரண்டு கதைகளையும் மெருகேற்றி தன்னிடம் கூற வேண்டும் என்று இரண்டு இயக்குனர்களிடம் விஜய் கூறி இருக்கிறாராம். இந்த இரண்டு இயக்குனர்களில் எந்த இயக்குனர் சரியான கதையோடு வருகிறார்களோ அவருடன் விஜய் படம் செய்ய அதிகமான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், தளபதி 69 திரைப்படத்தை தயாரிப்பது டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தான் என்ற உறுதியான தகவலும் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.