தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய ஒரு நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படம் ” கேஜிஎப்” திரைப்படம் போலவே தங்கச்சுரங்கம் பற்றிய கதைக்களத்தை கொண்டது என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பை கேஜிஎஃப் லோகேஷனில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த மதமே படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 18-ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதைகளத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பார்க்காத அளவிற்கு விக்ரம் இந்த படத்தில் தனது அசுர நடிப்பை வெளிப்படுத்துவர் என தெரிகிறது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…