வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை! இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுக்கிறேன் – நடிகை தமன்னா
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது, ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில், கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும்.
வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை. இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுத்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கபடியை பற்றிய நுணுக்கங்கள், கபடி வீராங்கனையின் உடல் மொழி போன்றவற்றை கற்றுக்கொண்டு நடித்து வருகிறேன். இது என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகும் எனக் கூறியுள்ளார்.