இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள்.
அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படத்தினுடைய பாசிட்டிவ் கருத்துக்களை கூறிவருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமினிறி, பல சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்துவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் அதில் ” ஆர்ஆர்ஆர் திரைப்படம் மக்களை கவர்ந்திருக்கிறது. அருமையான வலுவான ஆர்ஆர்ஆர் அனைத்து காலத்திலும் எதிரொலிக்கும் ஒரு கர்ஜனை. ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் நன்றி. ராம் சரணிடம் இருந்து அனல் பறக்கும் எனர்ஜி மற்றும் திரை மொழி. ஜூனியர் என்டிஆர் அலை உங்கள் நம் நெஞ்சங்களை வசீகரிக்கிறது. ராஜமௌலியின் கற்பனை எப்போதும் தோற்றதே இல்லை. “மஹாராஜா”மௌலிக்கு வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…