3 ரூபாய் பிஸ்கட் கொடுத்ததற்காக கேலி செய்த நெட்டிசன்கள்…!!! எதற்க்காக கொடுத்தேன் தெரியுமா….? விளக்கமளிக்கும் செந்தில் கணேஷ்….!!!!
செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள். இவர்களுக்கு நடிகர்களுக்கு உள்ளது போல ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவர்களது பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இந்த தம்பதியினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 ரூபாய் பிஸ்கட் கொடுத்ததாக பலரும் கேலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, சமீபத்தில் இவர் கரிமுகன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நன் ஏளனமாக எண்ணவில்லை. நான் உடனடியாக ஏதாவது உதவி செய்ய வேண்டுமே என்று தான் பிஸ்கட் வாங்கி சென்றேன். அதனை பலரும் தப்பாக கிண்டல் செய்து வருவதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in