தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்! இந்தியன் 2 பயங்கர ட்ரோலா இருக்கே!

இந்தியன் 2 : இன்றயை காலத்தில் ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் அந்த படத்தினை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கலாய்ப்பது உண்டு. வாரம் வாரம் ஓடிடியில் படங்கள் பார்க்க காத்திருப்பதை போல, எந்த படத்தை மீம்ஸ் செய்து கலாய்க்கலாம் என்று காத்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி காத்திருந்த அனைவரும் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தினை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியானது. படம் திரையரங்குகளில் வெளியானபோதே பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு இருந்தது என்றே சொல்லலாம். இந்த சூழலில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியானதில் இருந்து படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் கடுமையாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து மீம்ஸ் செய்து இருப்பதை பார்க்கலாம்.
