விசுவாசம் மோஷன் போஸ்டரை மீம்ஸ் போட்டு விமர்சித்த நெட்டிசன்கள்…!!!
தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் படமானது வரும் பொங்கலன்று வெளியாகவுள்ளது.இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வண்ணமாக நேற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விசுவாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், இந்த மோஷன் காப்பி அடிக்கப்பட்டது என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசுவாசம் மோஷன் போஸ்டரில் வரும் கூலிங் கிளாஸ் காட்சி, தெறி படத்தின் ஒரு பாடலில் வரும் கட்சியை காபி அடித்து இருப்பதாக ட்வீட்டரில் மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர்.
source : tamil.cinebar.in