பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்களை பணம் கொடுத்து கைப்பற்றி அந்த படங்களையும் வெளியிட்டது. குறிப்பாக துணிவு, ராங்கி, டிஎஸ்பி, கட்டா குஸ்தி, லியோ,இறைவன், வாத்தி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், ஜவான், ஆகிய படங்களை எல்லாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் வாங்கி இருந்தது.
இந்த ஆண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பாதி வரை ஆதாவது (இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை) நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி தங்களுடைய ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்வையாளர்களை பெற்ற தமிழ் திரைப்படங்கள் குறித்த டாப் 5 படங்கள் என்னவென்பதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 25.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வாத்தி. இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 20.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கட்டா குஸ்தி. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படம் தான் டிஎஸ்பி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு வெளியாகி 8.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ராங்கி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மொத்தமாக 5.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…