தமிழ் சினிமாவில் ஜாலியான கூட்டணி என்றால், நெல்சன்- சிவகார்த்திகேயன்- அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், படத்தின் பாடல்கள் வெளியாகும்போது, அதற்கான ப்ரோமோவை ரசிகர்களுக்கு பிடித்தவாறு கலகலப்பாக செய்து வெளியிட்டு அணைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தனர். இதனாலே இந்த கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து “பீஸ்ட்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கும் அனைத்து படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஒரு பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதுகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர்களது கூட்டணி குறித்து நெல்சன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நெல்சன் ” நானும் அனிருத்தும் இணைந்து ஒரு படலை பண்ண உட்காரும் போதே, எங்களுக்கு ஏற்ற ஒரு பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் தான் மனதில் தோன்றுவார். கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’, டாக்டர்
படத்தில் ‘செல்லம்மா’, பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து இந்த எல்லா பாடல்களையுமே அவர் எழுதும் போது அவ்ளோ கவனம் எடுத்து எழுதுவார்.
அவர்கிட்ட அதிகமா சீரியஸ்னெஸ் இருக்கும். ஒரு பாட்டு அவர்கிட்ட கொடுத்துட்டா, அந்தப் பாட்டு ரெக்கார்ட்டிங் முடியற வரைக்கும் தொடர்பிலே இருப்பார். “பீஸ்ட்” படத்தில கூட அவர் எழுதினா சரியா இருக்கும்னு நினைச்சு கூப்பிட்டோம். அவரும் இதை புரிஞ்சுக்கிட்டார். எங்க நட்புக் கூட்டணி எப்பவும் தொடரும்.” என நெகிழ்ச்சியுடன் நெல்சன் தெரிவித்துள்ளார்.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…