சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்?!
சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர்.
மீண்டும் அண்ணாத்த திரைப்படத்தை தயாரித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமே ரஜினியை வைத்து புதிய படம் தயாரிக்க உள்ளதாம். அதனால் பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்களாம்.
அப்படி, டாக்டர் பட ஹிட் கொடுத்த இயக்குனர், தளபதியின் பீஸ்ட் பட இயக்குனர் என அறியப்படும் நெல்சன் திலீப்குமாரிடம் சூப்பர் ஸ்டாருக்கு படம் இயக்க அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால், தற்போது பீஸ்ட் பட வேலையில் மும்முரமாக இருப்பதால் இப்போதைக்கு கதை ரெடி பண்ண முடியாது. பீஸ்ட் முடிந்த பிறகு தான் முடியும் என கூறிவிட்டாராம்.
அதனால், அடுத்தடுத்த இயக்குனர்களிடம் சூப்பர் ஸ்டாருக்காக சன் பிக்ச்சர்ஸ் கதை கேட்டு வருகிறதாம். இந்த வரிசையில் பேட்ட எனும் சூப்பர் ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்க்கு சூப்பர் ஸ்டாரை மீண்டும் இயக்கும் அதிக வாய்ப்புள்ளதாம்.