விஜய் சார் அதைப்பார்த்து செம ஷாக் ஆனார் – நெல்சன் திலீப் குமார்.!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப் குமார் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சில விஷயங்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது ” எங்க டீமே கலகலன்னு கலகலப்பாக இருக்கும். விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, சுனில்னு எல்லாருமே செம ஜாலியா இருப்போம்.
ஆரம்பத்துல விஜய் சாரே, ‘என்ன எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க’ன்னு ஷாக் ஆனார். அப்புறம் எவ்ளோ கலகலன்னு இருந்தாலும் வேலையில அத்தனை பேரும் கரெக்ட்டா இருந்தது அவரை இம்ப்ரஸ் பண்ணிடுச்சு” என தெரிவித்துள்ளார்.
மேலும், பீஸ்ட் படத்தின் டிரைலர் இன்று மாலை 6-மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் ட்வீட்டரில் BeastTrailerDay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து உற்சாகத்துடன் டிரைலர் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.