பீஸ்ட் முதல் பாதி கேட்டதும் விஜய் சம்மதித்து விட்டார்.! – நெல்சன்
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பலத்த வரவேற்பை பெற்றது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யிடம் பீஸ்ட் கதை கூறியது குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது ” விஜய் சாரிடம் கதை கூற சென்றேன்.. அப்போது விஜய் சார் சாதாரணமாக என்னிடம் பேசினார் நல்லா இருக்கீங்களா என்று கேட்டார்.
நானும் நன்றாக இருக்கிறேன் என கூறினேன். அடுத்து விஜய் சார் ஆரம்பிக்களாம என்று கேட்டார்..நானும் பீஸ்ட் கதையை கூற ஆரம்பித்து விட்டேன்.. அதன் பிறகு இது தான் இடைவெளி என்று விஜய் சாரிடம் சொன்னேன். அதுக்கு விஜய் சார் ஓகே இந்த படம் நம்ம பண்ணலாம்-னு சொன்னாரு.. முதல் பாதியை கேட்டுவிட்டு ஓகே னு சொன்னாரு அடுத்து தான் இரண்டாவது பாதியே சொன்னேன்.” என நெல்சன் கூறியுள்ளார்.