பெயரை மாற்ற வேண்டும்…’வாத்தி’ திரைப்படத்துக்கு வந்த திடீர் சோதனை.!
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்த்தா நடித்துள்ளார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படம் வெளியாவதில் ஒரு சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி, வாத்தி திரைப்படத்தின் பெயரை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தையில் ‘வாத்தி’ என படத்திற்கு பெயரிட பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாத்தி எனும் படத்திற்கு பெயர் வைத்துள்ளது ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். எனவே இப்படத்தின் பெயரை ‘வாத்தியார்’ என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே படத்தின் பெயரை மாற்றம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாத்தி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ப்ரிமியர் ஷோவை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது படத்தின் பெரிய மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.