நடிகை நயன்தாரா 39 வயதாகியும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் சென்று கலக்கினார். குறிப்பாக கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது.
இந்நிலையில், மும்பையில் நேற்று 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை நயன்தாரா ஸ்டைலான சேலை அணிந்துகொண்டு கலந்து கொண்டார். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார்.
இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். விருதுகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விருது வாங்கிய நயன்தாராவுக்கு அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!
இதனையடுத்து, இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு போட்டோஷூட் எடுத்துக்கொண்ட நயன்தாரா அந்த புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்கள் பார்த்த பலரும் ‘வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
மேலும், நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறாத நிலையில், அடுத்ததாக மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…