பல பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம்.!

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரின் திருமண ஆவணப்படம் நள்ளிரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது .

Beyond The Fairytale

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டார்.

தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தற்பொழுது, பல பஞ்சாயத்துக்கு மத்தியில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

மீண்டும் சர்ச்சை?

தற்பொழுது வெளியாகியுள்ள அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான், படப்பிடிப்பு காட்சிகளுடன் ஓ.டி.டி.யில் வெளியாகி இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆம், தனுஷ் தரப்பில் இருந்து காப்புரிமை கேட்கப்பட்ட காட்சிகள், ஆவணப்படத்தில் இருந்து இதுவரை நீக்கப்படவில்லை. முன்னதாக, ஆவண படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

அப்பொழுது, நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளும் இசையும் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டும் ஆவணப்படத்தில் இடம்பெற்றது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் – நடிகை நயன்தாரா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay