சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்.!
சாலையோரமாக வசிக்கும் மக்களுக்குப் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி பரிசுப்பொருட்கள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றார்கள். கடந்த புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கூட குழந்தைகளுடன் (முகத்தை மறைத்து வைத்துவிட்டு) இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிங்கர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரமாக வசிக்கும் மக்களுக்குப் தேவையான பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- லோகேஷ் என்கிட்ட ஒரு கதை சொல்லிருக்காரு…இன்ப அதிர்ச்சி கொடுத்த பொன்னியின் செல்வன்.!
தலையில் தொப்பி போட்டுகொண்டு அடையாளம் காண முடியாத அளவிற்கு எளிமையாக சென்று பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் நடிகை நயன்தாரா கடைசியாக கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ஹிந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்ப சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரமாக வசிக்கும் மக்களுக்குப் பரிசுப்பொருட்கள் வழங்கியுள்ளனர். #NayantharaVigneshShivan | #Nayanthara | #NewYear pic.twitter.com/jga8PjNpFf
— CineBloopers (@CineBloopers) January 4, 2023