இன்று தமிழ்சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயந்தாரவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஐயாவில் அறிமுகமாகி இன்று அன்னார்ந்து பார்க்கும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தன்னுடைய சினி வாழ்வில் எத்தனை ஏற்றங்களோ அத்தனை சறுக்கல்களை சந்தித்து,அவற்றை எதிர்கொண்டு இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு தெரியாமல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு பரிசளித்துள்ளது படக்குழு.
உன்னைப்போல் ஒருவன்,பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன் ஹூரோயினியாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் என்ற படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து தயாரிப்பதாக தகவல் வந்தது.
படம் முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருப்பதாக படக்குழு சொன்னார்கள். ஆனால் படத்தினை தெலுங்கு மற்றும் இந்தியில் நடிகை தமன்னா நடிகர் பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடரவிருப்பதாகச் கூறியது படக்குழு.
மேலும் நயன் நடித்த இந்த படம் வெளிவருமா என்று நடிகை நயன் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே தெரியும் என்றிருந்த நிலை நிலவிய நிலையில் படத்தின் இணைத் தயாரிப்பாளரான இசியயமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒ எஸ் ஆர் பிலிம்ஸ் வெளியேற்றப்பட்டது.இதனால் தற்போது படத்தை ‘செம போத ஆகாதே’ படத்தை விநியோகம் செய்த எட்சட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது.
நயன் நடித்த இந்த படத்தை வெளியிட தயாராகும் புதிய தயாரிப்பாளர் நிறுவனம் படத்தின் வியாபார சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.இந்நிலையில் நடிகை நயனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக புதிய டைட்டில் ஃபாண்டுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது.இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…