லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான “அன்னபூரணி” திரைப்படம் இன்று (டிசம்பர் 1ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார்.
மேலும், இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் போதிய விளம்பரம் மற்றும் ஒரே நேரத்தில் வெளியிடப்படாததால் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாராவின் முந்தைய படங்களைப் போலல்லாமல், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் அதிக காட்சிகள் இல்லாமல், குறைந்த வெளியீடாக அமைந்துள்ளது.
ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய பார்க்கிங்? முழு விமர்சனம் இதோ!
இறைச்சி சாப்பிடுவது குற்றமாகக் கருதப்படும் பழமைவாத பிராமண குடும்பத்தில் வளர்க்கப்படும் அன்னபூரணி (நயன்தாரா) இந்தியாவிலேயே ஒரு சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்து வருகிறார். பின்னர், அந்த கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் கதை.
ஒற்றை ஆளாய் தோளில் சுமந்து ‘ஹிட்’ வரிசையில் சேர்த்த ரன்பீர் கபூர்.! Animal பார்க் ஆன் தி வே…
அப்பா-மகன் படங்கள் பல இருந்தாலும், அப்பா-மகள் டைனமிக்கை அலசி ஆராயும் படங்கள் அதிகம் இல்லை. அப்படி நூறில் ஒன்று அன்னபூரணியை சொல்லலாம். சிறுவயதில் நாம் பார்க்கும் நேரத்திலிருந்தே, அவளது தந்தை ரங்கராஜனுடன் (அச்யுத் குமார்) ஒரு அற்புதமான தொடர்பு உள்ளது.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதன் கோவிலில் தலைமைச் சமையற்காரனாக இருக்க, ஒரு பிரமாணபெண்ணாக பெண்ணாக வரும் நயன்தாரா, சிறு வயதில் இருந்தே சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவை அடையும் வரை உள்ள தருணம். சிறு வயது நிறைவு பெற பெரியவளாக மாறிய பின் அன்னபூரணி, தனது இளங்கலைப் படிப்பிற்குப் பிறகு சமையல் பள்ளியில் சேர விரும்புகிறார், அது போல் சேர்ந்து படிப்பை தொடர்கிறாள்.
பின்னர், அன்னபூரணி ஒரு சமையலறை விபத்தில் தொடங்குகிறார். மேலும் அவர் குணமடையும்போது, அவர் தனது வாழ்க்கையில் இந்த நிலைக்கு எப்படி வந்தார் என்பதை விரிவாக ஃப்ளாஷ்பேக் அதை விவரிக்கிறது. அன்னபூரணியில் அதிக ஆச்சர்யங்கள் இல்லாவிட்டாலும், டெம்ப்ளேட்டில் ஒட்டிக்கொண்டாலும் சரக்குகளை வழங்குவதில் படம் தடுமாறுகிறது.
படத்தில் நடிகை நயன்தாரா, இதற்கு முன் இல்லாதவாறு மனதைக் கவரும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஒற்றை ஆளாக படத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு அழகுடனும், நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார். நயன்தாரா இதற்கு முன்னதாக பல்வேறு ஜானர்களில் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப்படம் அவருக்கு வேறு மாதிரியான ஜானரை ஏற்படுத்தியுள்ளது.
அன்னபூரணியின் நண்பன் ஃபர்ஹானின் (ஜெய்) கதாபாத்திரம் ஏன் வந்தது என்று தெரியாமல் வந்த பாதை மறந்து செல்வது போல் அமைந்துள்ளது. மேலும், ஃபர்ஹானின் தந்தை (சத்யராஜ்) வரும் காட்சிகள் அதாவது நயன்தாராவுடன் இணைக்கும் காட்சிகள் ராஜா ராணி அப்பா-மகள் காம்போவை நினைவூட்டுகிறது.
இயக்குனர் அழுத்தமான கதைக்களத்துடனும், நயன்தாராவின் அட்டகாசமான நடிப்புடன் முதல் பாதி ஆகா ஓகோன்னு சென்றாலும் இரண்டாம் பாதியில் தோய்வை ஏற்படுத்தியது, அனாலும் அதற்கு கிளைமேக்ஸ் காட்சி கைகொடுத்து விட்டது.
குறிப்பாக,, “எந்தக் கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதில்லை” என்று ஜெய் பேசும் வசனம் , “புடிச்சதா பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம்” என்று நயன்தாரா சொல்லும் வசனம் இந்திய கலாச்சார சூழலில் உணவு சார்ந்த அரசியல் பேசும் படமாக எடுக்க நினைத்து சில இடத்தில கோட்டை விட்டுள்ளார்.
இருந்தாலும், படம் எமோஷனல் கனெக்ட் ஆகி ஒரு ஃபீல் குட் படமாக அமைந்திருக்கிறது. தமனின் பின்னணி இசை ஒரு பெரிய ஹைலைட். மொத்தத்தில் இந்தப்படம் மூலம் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவின் நேர்த்தியான அறிமுகமாக அமையும் என நம்பப்படுகிறது. நீண்ட நாட்கள் கழித்து த்ரில்லர் அல்லாத பெண்ணை மையமாகக் கொண்ட படமாக அன்னபூரணி அமைந்துள்ளது.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…