Annapoorani[FILE IMAGE]
நடிகை நயன்தாரா மற்றும் லாஸ்லியா ஆகியோர் தனித்தனியே நடிக்கும் படத்திற்கு ஒரே தலைப்பு உள்ளதால் சிறிய குழப்புமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டது.
ஆனால், அந்த படத்தின் தலைப்பு அக்டோபர் 24 அன்று, விஜயதசமியை முன்னிட்டு டீசருடன் வெளியானது. இந்த படத்துக்கு ‘அன்னபூரணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பது டீசரில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், நடிகை லாஸ்லியா நடித்திருக்கும் புதிய படத்திற்கும் ‘அன்னப்பூரணி’ என தலைப்பு வைக்கப்பட்டு கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், எப்படி ஏற்கனவே அறிவித்த படத்தின் பெயரை முன்னணி நடிகை படத்திற்கு வைத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை தமிழ், ஆங்கிலம் என பெயர்களில் வேறுபாடு உள்ளதால் அந்த காரணம் காட்டி அனுமதி வழங்கப்பட்டிருக்குமா என்றார் தெரியவில்லை. நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘Annapoorani’ என ஆங்கிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களில் வெளியிட்டின் போது, பெயர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் அன்னபூரணி
‘அன்னபூரணி’ என தலைப்பு வைப்பட்டிருக்கும் நயன்தாராவின் கேரியரில் 75வது படத்தை இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில், ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
லாஸ்லியா அன்னபூரணி
பெண்களை மையப்படுத்திய த்ரில்லர் திரைக்கதையில் நடிகை லாஸ்லியா நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் லயனல் ஜோஷ்வா இயக்குகிறார். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஹரி கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இப்படம் போஸ்ட் புரொடக்ஷனின் இறுதிக்கட்டத்தை கடந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…