நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.
2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. பெயர்கள் என்னவென்றும் கூறாமல் இருந்தனர். இதனையடுத்து, சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா முதல்முறையாக குழந்தைகளின் பெயர்களை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தனது மனைவி நயன்தாரா மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு குழந்தைகளின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் நெகிச்சியுடன் கூறியிருப்பதாவது ” அன்பான நண்பர்களே, எங்கள் ஆசிர்வாதங்களுக்கு, இது போன்ற எங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன்,உலக் தெய்விக் N சிவன் நாங்கள் பெயரிட்டுள்ளோம். N என்பது உலகின் சிறந்த தாயை குறிக்கிறது #நயன்தாரா. வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணங்கள்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…