உலகத்தில் சிறந்த தாய் நயன்தாரா தான்…குழந்தைகள் பெயர்களை அறிவித்த விக்கி.! குவியும் வாழ்த்துக்கள்.!

Default Image

நடிகை நயன்தாராவும்,  இயக்குனர் விக்னேஷ் சிவனும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.

nayanthara vignesh shivan baby
nayanthara vignesh shivan baby [Image Source : Twitter]

2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. பெயர்கள் என்னவென்றும் கூறாமல் இருந்தனர். இதனையடுத்து, சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா முதல்முறையாக குழந்தைகளின் பெயர்களை அறிவித்திருந்தார்.

NAYANTHARA BABIES
NAYANTHARA BABIES [Image Source : Twitter]

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தனது மனைவி நயன்தாரா மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு குழந்தைகளின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் நெகிச்சியுடன் கூறியிருப்பதாவது ” அன்பான நண்பர்களே, எங்கள் ஆசிர்வாதங்களுக்கு, இது போன்ற எங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன்,உலக் தெய்விக் N சிவன்   நாங்கள் பெயரிட்டுள்ளோம். N என்பது உலகின் சிறந்த தாயை குறிக்கிறது #நயன்தாரா. வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணங்கள்” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்