Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இறைவன், கனெக்ட், கோல்டு, உள்ளிட்ட படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த படங்களின் தோல்வியை தொடர்ந்து நயன்தாரா தொடர்ச்சியாக படங்களும் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தமிழில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவுக்கு நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில், தான் நடிகை நயன்தாரா மலையாள சினிமா பக்கம் சென்றுள்ளாராம். தமிழில் அடுத்ததாக பட வாய்ப்புகள் இல்லை மலையாள சினிமாவிற்கு சென்று அங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்தால் பட வாய்ப்புகள் குவியும் என நயன்தாரா திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த வகையில், தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகை நயன்தாரா நிவின் பாலிக்கு ஜோடியாக கடந்த 2019-ஆம் ஆண்டு லவ் ஆக்ஷன் டிராமா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் மலையாள சினிமாவுக்கு சென்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…