சின்ன பட்ஜெட் படமா? நோ..நோ..! கறார் காட்டும் நயன்தாரா?
நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அன்னபூரணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களாகவே பரவி கொண்டு இருந்தது.
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்! குக் வித் கோமாளி புகழ் எமோஷனல்!
அது என்னவென்றால், நயன்தாரா மீண்டும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தினை கனா படத்தினை இயக்கிய அருண்ராஜா காமராஜ இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த திரைப்படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இருப்பினும் நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து படம் செய்யவுள்ளது உறுதி என்றே கூறினார்கள். இந்நிலையில், தற்போது கிடைத்து இருக்க கூடிய தகவல் என்னவென்றால், நயன்தாரா மற்றும் அருண்ராஜா காமராஜ் இருவரும் இணையவுள்ள படத்தின் கதையை தயாரிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாம்.
அருண்ராஜா காமராஜ் ஏற்கனவே நயன்தாராவிடம் 6 கதைகளை கூறியிருந்தாராம். அந்த 6 கதையும் அருமையாக இருந்த நிலையில், அந்த கதைகளை தயாரிப்பு நிறுவனத்திடம் அருண்ராஜா காமராஜ் கூறினாராம். அதற்கு அந்த தயாரிப்பு நிறுவனம் எது குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியுமோ அந்த கதையை தேர்வு செய்து நயன்தாராவிடம் [பட்ஜெட் விஷயங்களை பற்றி பேசியுள்ளார்கள்.
இந்த தகவல் தெரிந்தவுடன் என்னது என்னை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பீர்களா? என கேட்டுவிட்டு குறைந்த பட்ஜெட் படத்தில் எல்லாம் நான் நடிக்கமாட்டேன். பெரிய பட்ஜெட்டில் எடுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் அந்த தயாரிப்பு நிறுவனம் சற்று யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.